கவிதை 01



ஒரு முறை கீறுகிறாய் ..

இரண்டாவதாக கீறுகிறாய் ...

மூன்றாவதாகவும் கீறுகிறாய் ....

மேலும் கீறிக்கொண்டேயிருக்கிறாய் .......


வலிகளைப் போல அல்ல

ரத்தம்

சாவகாசமாகவே கசிகிறது...

10 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

வரவனையான் said...

உங்கள் வரிகள் அருமை தோழி....

சந்திப்பு said...

எவ்வளவு தூரம் கீற முடியும்...
இரத்தம் தீரும் வரைதான்...

வித்யா நல்ல கவிதை என்பதைவிட, இது உணர்ச்சியின், வேதனையின் வலியாகவே உணர்கிறேன். அரவாணி என்பது இயற்கையின் இன்னொரு சித்திரம் அவ்வளவுதான். தாங்கள் தமிழ்தளத்தில் எழுத வந்திருப்பதே பெரும் புரட்சிதான். எழுதுங்கள், எழுதிக் கொண்டே இருங்கள்... இதன் மூலம் சமூகம் உங்களைப் திரும்பிப் பார்க்கும் வரை எழுதிக் கொண்டே இருங்கள். வாழ்த்துக்கள்!
நட்புடன்
சந்திப்பு : கே. செல்வப்பெருமாள்

ஒரு பொடிச்சி said...

சில சொற்கள் சொல்லி விடுவதற்கு அப்பால், எங்களிடம் சொல்லுவதற்கு ஒன்றும் இருப்பதில்லை..

சாதாரணமான/வழமையான வார்த்தைகளுீடாகவே உருவாகிறபோதும் அதற்குள்ளாகவே அதிர்வுகள் ஏற்படுத்தற வரிகளும் அப்படியானவைதான்.

இதுதான் உங்கட வரிகளைப் படிக்கையில் தோன்றுகிறது..

துளசி கோபால் said...

மனவேதனைக்கு முன்னாலே உடல்வேதனை ஒண்ணுமேயில்லை.

ப்ரியன் said...

நன்றாக இருக்கிறது உங்கள் கவிதையும் வார்த்தை பிரயோகமும்...வாழ்த்துக்கள்

கார்திக்வேலு said...

எளிமையாகவும் சிறப்பாகவும்
கவிதை அமைந்துள்ளது

G.Ragavan said...

இந்தக் கவிதையை நான் புரிந்து கொண்டது இப்படி.

கீறுதல் - காயப்படுத்துதல்

காயப்படுத்துகிறாய் அடிக்கடி. உடனே வலிக்கிறது. ஆனால் அத்தோடு போகவில்லை. அவ்வப்போது கசிந்து கசிந்து துன்பம் குடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.

சரியா?

எப்பவோ குடுத்த கஷ்டங்களை மனசு இன்னமும் நெனச்சு வேதனைப் படுறதத்தான சொல்றீங்க?

VSK said...

'சாவகாசமாகவே', இந்த ஒரு வார்த்தையில் என்னவெல்லாம் சொல்லிவிட்டிர்கள்!

படித்ததும் ஒரு 'பெரிய வலி' உணர்ந்தேன்.

சற்று நேரத்தில் அந்த வலி மறையத் தொடங்கியது.

ஆனால், இரத்தம்........?

அது, நினைக்கும் போதெல்லாம், இன்னமும் 'சாவகாசமாகவே' கசிந்து கொண்டிருக்கிறது!

உள்ளத்து ரணங்களை இவ்வளவு உணர்ச்சியுடன், அந்த பாரதிக்குப் பின் உணர்ந்தேன்!

"தண்ணீர் விட்டோ வளர்த்தோம் -- சர்வேசா! -- இதைக்
கண்ணீரால் காத்தோம்!
கருகத் திருவுளமோ?"

உங்கள் கசிதல் விரைவில் நிற்க வேண்டுகிறேன்.

மிதக்கும்வெளி said...

நல்ல பதிவு.தொடர்ந்து எழுதுங்கள்.

Unknown said...

உங்கள் உணர்ச்சிகளை அருமையாக வெளியிடும் திறமை இருக்கிறது. இது சாதாரண திறமை இல்லை. ரொம்ப ஃபீல் பண்ண வைக்கிறீங்க - ஒவ்வொரு தடவையும்.

உங்கள் வலிகளை பகிர்ந்து கொள்ள நாங்கள் எல்லோரும் எப்பவும் உண்டு.

உங்கள் சந்தோஷங்கள், வாழ்வின் எதிர்பார்ப்புகளையும் கவிதைகளாய் படையுங்கள்; படைப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்.