உனக்கு தெரிவதில்லை / தெரிவதில்லையா?




சில சமயங்களில் உனக்கு தெரிவதில்லை

சிறிய எறும்புகளை மிதித்தபடி நீ நடந்து போவதை


சில சமயங்களில் நீ உணர்வதில்லை

பசும்புல்லை நசுக்கியபடி கடந்து போவதை


தெரிந்தும், உணர்ந்தும்

கடந்து போகிறாய் என் அந்தரங்கத்தை மிதித்தபடி...


யார் எவர் என்று தெரியாமல்

தொடர்ந்து மிதிபட்டே வருகிறோம்

நானும் இருண்ட என் எதிர்காலமும்!!

11 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

நளாயினி said...

யார் சொன்னது? இருண்ட எதிர்காலமென்று.? நமக்கு நாமே மனதுள் சுடர் ஏற்றிய படி செல்ல வேண்டும். சுடர் சிலசமயம் பல வழிகளால்அணைந்து போகலாம். அதற்காய் நாம் துவண்டு போதல் நன்றன்று. சுடர் அணைந்ததும் உடனடியாக ஒரே கும் இருட்டாக பாதைதெரியாது இருக்கும். பிறகு நின்று நிதானியுங்கள்.சிந்தியுங்கள் செயல்படுங்கள். தானாக பல வழிகள் மனதுள் தெரியும். உற்சாகம் பிறக்கும். சுடர் ஒன்றல்ல பல சுடர்கள் எம்முள் அதிபிரகாசமாக தெரியும். பின்னர் நம்முள் எரியும் ஒருசுடர் அணைந்தாலும் மற்றய சுடர்துணைகொண்டு நாம் முன்னேறலாம். கவனித்துப்பாருங்கள். சங்கிலித்தொடராக நமக்குள் ஒளிரும் சுடர் அணைவதும் பிரகாசமாய் இன்னொரு சுடர் வழிகாட்டுவதையும் உணர்வீர்கள்.

Unknown said...

hi vidya - nalla eluthiirukkinga - ullathin nokuthalai velikaatti
nambikkai ullavarai vazhvom - nambikkaiyai illakkamal -
pottuvor pottattum - thootuvor thoottatum - nam vazhkkai namakku - avarkal vaalkkai avarkalukku - puriyuthu - kadinamana vazhkkai thaan - udal oonam oru vagai ental - manam oonam innoru vagai - but fortunately you have got some frinds to encourage you - antharangam punithamanathu -
unkalukkul vaala kattukollunkal - mattathellam thucham - you are working, earning - somehow you can manage to come over the economic crisis - then what - ovvaruthorukkum ovvaru ranam irrukkum - thondi paarthaal thaan theriyum - try to digest - vaazhkkai unkal kaiyil - have a nice life.

Unknown said...

//அரவாணிகள் தமிழ்சினிமாவில் பயன்படுத்தப்படுவது பற்றி? உங்களுடைய படத்தில் பயன்படுத்தப்பட்ட விதம் பற்றி?

நான் அரவாணிகள் சார்ந்த படங்கள் நிறையப் பார்த்திருக்கிறேன். அவர்களைப் பயன்படுத்திய படங்கள் எல்லாமே பாடலுக்கு காமெடியா பயன்படுத்துவாங்க. நான் அவர்களை அவர்களின் வாழ்க்கையொடு ஒட்டியிருக்க கூடியமாதிரி அவர்களுடைய தொழில் சார்ந்து உபயோகப்படுத்தியிருக்கிறேன். அவர்கள் என்ன செய்கிறார்கள் அவர்களக்கு ஏது வருமானம் குறிப்பாக கிராமங்களில் இருக்கக் கூடிய அரவாணிகள். இந்தமாதிரியான கூத்துக்களுக்கும் ஆடல் பாடல்களுக்கும் திருவிழாக்களுக்கும் போய்த்தான் அவங்கள் வந்து பிழைப்பு நடத்திக்கொண்டு இருக்கிறார்கள் மத்தபடி அவர்களுடைய வாழ்க்கை என்று ஒன்று தனியாக இருக்கிறது. அதை நான் வேறொரு காலகட்டத்தில் பதிவு செய்வேன். ஆனா இப்ப வந்து இந்தப்படத்தில் அவர்களை அவர்கள் தொழில் சார்ந்து பயன்படுத்தியிருக்கிறேன். எந்த மாற்றமும் இல்லாமல் அதில் கலப்படமெல்லாம் கிடையாது. கலப்படமில்லாம கொடுத்திருக்கன் அதால அதில எந்த தப்பும் கிடையாது அல்லது தோணல. திடீர்னு ஒரு பாட்டுக்கு கொண்டு வந்து திணிக்காம அந்த கிராமத்திலயே அவங்களும் இருக்காங்க அந்தப்பக்கம் திருவிழா நடக்கும்போது இருக்காங்க இந்தப்பக்கம் இன்னொரு திருவிழா நடக்கும்போது இருக்காங்க என்னுடைய படத்தில் அவர்களுடைய இயல்போட இருக்காங்க அதனால தப்பா தோணாது. நிஜம் எப்பொழுதும் தோற்பதில்லை.\\

அமீரின் இந்த பேட்டி பார்த்தீர்களா?

http://agiilankanavu.blogspot.com/2007/05/blog-post_18.html

சேதுக்கரசி said...

அன்புடன் கவிதைப் போட்டியில் இயல்கவிதைப் பிரிவின் நடுவர் "திசைகள்" ஆசிரியர் எழுத்தாளர் மாலனின் ஊக்கப் பரிசைப் பெற்றிருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்!

உங்கள் கவிதைகள் இரண்டும் மாலனின் பாராட்டைப் பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது!

SurveySan said...

ஸ்மைல்,

அழகான கவிதை.

அரவாணிகளை சிலர் மதிக்காமல் மிதிப்பதர்க்குக் காரணம், சில அரவாணிகள் நம் மனங்களில் ஏற்படுத்தி வைத்துள்ள ஒரு 'stay away mentality' தான்.

சென்னை ரங்கநாதன் தெருவில், ஒரு சில அரவாணிகள் செய்த அலம்பு இன்னும் ஞாபகம் இருக்கிறது. இரு தரப்பும், காலப்போக்கில், ஒரு புரிதலுடன் செயல்பட்டால் the gap might shrink.

புரிதலை கொண்டுவர உங்களைப் போன்றவர்கள் செய்யும் சில விஷயங்கள் நாளடைவில் மிக உதவும்.

சேதுக்கரசி said...

என் பின்னூட்டம் கிடைத்ததா? பிரசுரிப்பதில் ஏதேனும் சிக்கல் என்றால் தெரிவிக்கவும். நன்றி.

Anonymous said...

i donno what to write...but have hopes...dreams and work for it..may god bless you

Unknown said...

hmmm...An excellent poem....I read abt u in Magazines, but this is the first time I visited ur page...Let we hope for a change in the people and the society...

Sakthy said...

வித்யா
கவிதை வரிகள் நெஞ்சை தொட்டதும் உண்மை , சுட்டதும் உண்மை.
அழகான ஆழமான வரிகள்.
உங்களுக்கு என் வாழ்த்துக்கள்

Sakthy said...

வித்யா
கவிதை வரிகள் நெஞ்சை தொட்டதும் உண்மை , சுட்டதும் உண்மை.
அழகான ஆழமான வரிகள்.
உங்களுக்கு என் வாழ்த்துக்கள்

அமிர்தவர்ஷினி அம்மா said...

நறுக்கென்று மனதில் தைக்கிறார் போல் சொல்லியிருக்கிறீர்கள்.

மிக நல்ல கவிதை.

உங்களின் எதிர்காலம் பிரகாசமாய் இருக்க எனது ப்ரார்த்தனைகள்.