உதவி

இது குறித்து கேட்கலாமா? கூடாதா? என்று தெரியவில்லை. இருந்தாலும், எதுக்கும் இருக்கட்டும் என்று நண்பர்களிடம் கேட்கிறேன் ஒரு உதவி. பகுதி நேர சுய தொழில் போல, என்னால் DTP பணிகள் செய்ய முடிவதாலும், தனிப்பட்ட முறையில் எனது எழுத்துப் பணி மற்றும் சமூகப் பணிகளுக்கும் கணினி அல்லது மடிக்கணினி வாங்கும் எண்ணம் நீண்ட நாட்களாக உள்ளது.


ஏற்கனவே சொன்னது போல், கடந்த ஆண்டு முழுவதும் நிரந்தர வேலையின்றி, உடல்நிலையும் இல்லாமல் வாழ்ந்து வருகிறேன். மடிக்கணினி/கணினி வாங்கும் தேவையை நிறைவேற்ற முடியவில்லை.

பல நண்பர்கள் முன்பு எனக்கு உதவி செய்ய தயாராக உள்ளதாக சொல்வதுண்டு. யார் யாரென்று நினைவில்லை. எனக்கு உதவத் தயாராக உள்ள யார்வேண்டுமானாலும் தயங்காமல் எனக்கு உதவ வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். தங்களால் முடியாத போதும், தங்களுக்கு தெரிந்த நண்பர்களோ, அமைப்புகளோ உதவ தயாராக இருப்பினும் தகவல் தெரிவிக்கலாம்.

நன்றி.



உதவ Name : Living Smile Vidya,
Acct No . 862 137 740
Bank : Indian Bank,
Branch : Saida pet,


தொடர்பிற்கு : +91 99944 36973

livsmile@gmail.com

8 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

வால்பையன் said...

பங்கெடுத்து கொள்கிறேன்!

நிகழ்காலத்தில்... said...

தங்களின் பணிக்கு மேசைக்கணினியே உகந்தது என எண்ணுகிறேன்.

மடிக்கணினி ஒருவருடம் தாங்குகிறது. அப்புறம் செலவு பின்னுகிறது.

என்னால் முடிந்ததை நிச்சயம் செய்கிறேன்..

தங்களின் உடல்நிலை நலம்பெறவும், வேலை தொடர்ந்து கிடைத்திடவும் மனமார வாழ்த்துகள்

நிகழ்காலத்தில் சிவா..

அன்புடன் அருணா said...

எனக்குத் தெரிந்தவர்களிடம் சொல்கிறேன்.

sathishsangkavi.blogspot.com said...

தங்களுக்கு Page Layout work தெரியுமா?

நானும் பங்களிக்கிறேன்..

நட்புடன் ஜமால் said...

நிச்சியம் தெரிந்தால் சொல்கிறேன்.

ஈரோடு கதிர் said...

நானும் முடிந்த உதவி செய்கிறேன்...

சிவா...

மடிக்கணினிதான் வசதி... நான் அதைத்தான் DTP க்கு உபயோகிக்றேன்.. UPS பிராப்ளம் வராது. மின்சார செலவு குறைவு... வேண்டும் இடத்திற்கு எடுத்துச்செல்ல வசதியாக இருக்கும்..

மூன்று ஆண்டுகளாக தினமும் 12 மணி நேரம் என் மடிக்கணினி இயங்குகிறது..

நன்றாகவே உள்ளது

Ganpat said...

அடுத்தவாரம் என்னுடைய எளிய பங்களிப்பு உங்களை வந்தடையும்.Please accept.
நன்றி
பி.கு: வால் தம்பிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.வாழ்க நீவிர் மற்றும் நின் சுற்றம்.மற்ற கருணை உள்ளங்களுக்கும் என் வணக்கம்.

லிவிங் ஸ்மைல் said...

எனது முயற்சிகளுக்கு நல்லெண்ணம் கொண்டு உதவ முயன்ற நண்பர்களுக்கு முதலில் எனது நன்றி.

இதுவரையில் நண்பர்கள் அனுப்ப எனக்கு கிடைத்த மொத்த தொகை 17,500/-

இடையில் பாலா ராஜன் கீதா அவர்கள் தமது பயன்படுத்திய பழைய மடிக்கணினி ஒன்றினை தந்துதவினார். ஆனால் அதில் பல சிக்கல்கள் இருந்தது. RAM புதிதாக மாற்றியது இன்ன பிற ரிப்பெருக்கு 4,500/- செலவாகியது. அவ்வளவு செலவு செய்தும், இன்னும் Keypad சிக்கல், எந்தவொரு S/W இன்ஸ்டால் செய்வதில் சிக்கல் என பயன்படுத்த முடியாத சூழலிலேயே உள்ளது. இதில்.. மீதியுள்ள 13,500/- இந்நீண்ட கால தொடர் வறுமையின் சோதனையால், எனது வாடகை மற்றும் இதர செலவுகளுக்கு பயன்படுதும் நிர்பந்ததிற்கு ஆளானேன்.

எனது நெருங்கிய நண்பர் அத்தொகையை Replace செய்து விடுவதாக உறுதியளித்துளார். இருந்தாலும், நீண்ட நாளாக இதுகுறித்த குற்றவுணர்வோடு இருந்தேன்..

மன்னிக்க மனமுள்ள தோழர்கள் மன்னிக்கவும்.

இன்னும் மடிக்கணினி வாங்காததற்கு தொகை போதாததும், உள்ளதும் செலவானதுமே காரணம்..

மன்னிக்கவும்..

புரிதலுக்கு நன்றி..